
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
இதையும் படிக்க : பெரியார் தமிழ்நாடு, இந்தியாவிற்கு மட்டுமல்ல...முதலமைச்சர் பெருமிதம்!
இந்நிலையில், பல்லாவரம் இங்கிலீஷ் எலெக்ட்ரிகல் கம்பெனி மைதானத்தில் 2 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் பங்கேற்கும் பகுதி என்பதால் அப்பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தற்பொழுது அந்த பகுதி முழுவதும் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல்மென்ட் ஊழியர்கள் மரக்கலைகள் வெட்டியும், மண்மேடுகளை சமப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் போலீசார் இரவும் பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.