"அமைச்சரிடம் ரூ. 4000 லஞ்சம் கேட்ட அர்ச்சகர்!" திடீர் ஆய்வால் மிரட்ட முருகன் கோவில் - 'மன்னிப்பு கடிதம்' எழுதிய கோவில் ஊழியர்கள்

ரகசிய ஆய்வின்போது சரிவர பணி செய்யாதவர்களை மன்னிப்பு கடிதம் எடுத்தபடி கூறியுள்ளார்.
Tiruchendur temple controversy
Tiruchendur temple controversyTiruchendur temple controversy
Published on
Updated on
1 min read

அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக இருக்க கூடிய திருச்செந்தூர் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. மேலும், திருச்செந்தூர் முருகனை கணவரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில், திருச்செந்த்தூர் முருகனை கணவரும் பக்தர்களுக்கு இடையூறுகளும், பல்வேறு முறைகேடுகளும் நடப்பதாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணமே உள்ளது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீரெனெ அங்கு ஆய்வினை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் ரமேஷ் சாதாரண உடையில், முகக்கவசம் அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் இவர், கோவில் வளாகம், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டார். இதனையடுத்து, பக்தருடன் சேர்ந்து அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டு, அன்னதான உணவின் தரம் குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், தரிசன ஏற்பாடுகள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பணியை சரிவர செய்யாத கோவில் பணியாளர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முகக்கவசம் அணிந்து சாதாரண பக்தர் போன்று தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் ரமேஷிடம் அங்குள்ள அர்ச்சகர் உடனடியாக தரிசனம் செய்ய ரூ. 4000 செலுத்தும் படி கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் தன்னிடம் கையில் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த அர்ச்சகர் "பரவாயில்லை G-Pay மூலம் கூட செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார். இதன் பின்னர், வந்தது அமைச்சர் என்று தெரிந்ததும் அர்ச்சகர் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் மேற்கொண்ட ரகசிய ஆய்வின்போது சரிவர பணி செய்யாதவர்களை மன்னிப்பு கடிதம் எடுத்தபடி கூறியுள்ளார். அதனடிப்படையில், சிலர் மன்னிப்பு கடிதத்தையும் எழுதி கொடுத்துள்ளனர். அமைச்சரின் திடீர் ஆய்வாலும், அர்ச்சகரின் செயலாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com