பிரதமர் மோடி 31 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருவதை முன்னிட்டு சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வரும் வழியெங்கும் ஆயிரக் கணக்கான பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் குழுமியிருக்கின்றனர்.
ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டரங்கை மோடி சென்றடைய உள்ள பிரதமருக்கு, வழியெங்கும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு தந்த நாயகனே என மோடியை புகழந்து பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. சிவானந்தா சாலையில் பாஜக சலை, கலாச்சாரப் பிரிவு சார்பில் கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்லவன் சாலை சந்திப்பில் செண்டை மேளம், பொய்க்கால் குதிரை ஆட்டம், செண்டை மேளம் என களை கட்டியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மோடியை வரவேற்க திரண்டுள்ளார்கள். இதனால் சென்னையில் மட்டும் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சற்றுமுன்னர் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் வரவேற்றனர்.