"Breaking Bad தொடர்ந்து.. Prison Break-ம் தொடங்கிவிட்டது" - 17 கைதிகள் தப்பியோட்டம்.. தவெக அரசைச் சாடிய மு.க.ஸ்டாலின்!

ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
Theni jail escape
Theni jail escape
Published on: 
Updated on: 
1 min read

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியது தேனி மட்டுமின்றி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறையில் ஒரு கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடி போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய நிலையில் அவரைத்தொடர்ந்து அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். மொத்தமாக 17 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இதில், 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில், போலீசார் மீதமுள்ள 13 கைதிகளை பிடிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளனர். அதில் ஒரு பகுதியாக பல்வேறு கிராமங்களில் ட்ரோன் மூலம் தப்பி கூடியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கைதிகளின் தப்பியோடிய நிகழ்விற்கு, அதை செரியாக நிர்வகிக்க தவறிய அரசினையும் விமர்சித்து, பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர், மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளபக்கத்தில் தனது கண்டனத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!. ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.

ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது" என்று காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இந்த கைதிகள் தப்பியோடிய விவகாரமானது, தமிழக மக்களிடையே பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "இவர்கள் அனைவரும் எப்படி தப்பித்தார்கள்?, 200 பேர் மட்டுமே இருக்கவேண்டிய சிறையில் 330 கைதிகள் அடைக்கப்பட்டது ஏன்?, போதுமான அளவிற்கு காவலர்கள் இருந்தார்களா? அல்லது இதில் வேறு ஏதேனும் மர்மம் இருக்கிறதா?" என்ற பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அரசியல் வட்டாரம் முதல் மக்கள் மனம் வரை இருப்பதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com