71 வாடிக்கையாளர்களின் நகைகளை ஏலத்துக்கு விட்ட தனியார் வங்கி...பரிதவிக்கும் பொதுமக்கள்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் 71 வாடிக்கையாளர்களின் நகைகளை ஏலத்துக்கு விட்ட தனியார் வங்கி.
71 வாடிக்கையாளர்களின் நகைகளை ஏலத்துக்கு விட்ட தனியார் வங்கி...பரிதவிக்கும் பொதுமக்கள்
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் போடி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் மற்ற வங்கிகளை காட்டிலும் நகைக்கு அதிகளவில் பணம் கொடுப்பதால் அதிகளவிலான சிறு வியாபாரிகளும் வணிகர்களும் பொதுமக்களும்  நகைகளை அடகு வைத்து உள்ளன.

தமிழகத்தில் தற்போது அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் வட்டி கட்டாத 71 வாடிக்கையாளர்களுக்கு நகைகள் ஏலத்துக்கு விடப் போவதாக 31.1.2020 அன்று தபால் மூலம் தகவல் அளித்துள்ளனர்.

மிக குறுகிய காலத்தில்  தனியார் வங்கி நகை ஏலத்துக்கு  விடுவதை அறிந்த வாடிக்கையாளர்கள் செய்வதறியாது இந்த முழு ஊரடங்கு  நேரத்தில் வட்டி கட்டுவதற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் திணறி உள்ளனர்.

சில வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரும் தொடர்பு கொண்டு சிறிது அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்காமல் 31.5.21 அன்று 71 வாடிக்கையாளரின் நகைகளை ஏலத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நேற்றும் இன்றும் வட்டி கட்டலாம் என வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கு தங்களது நகை ஏலத்துக்கு சென்றதை அறிந்து வங்கி வாசல் முன்பாக பரிதவிக்கின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 165 கிராம் மதிப்பிலான நகைகளை 6.50 லட்சம் ரூபாய்க்கு இந்த தனியார் வங்கியில் அடகு வைத்ததாகவும் தற்போது வரை வட்டியுடன் சேர்த்து ஏழு லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும்  வங்கியில் தெரிவித்தனர். 

கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை தமிழகத்தை மிக அதிகமாக பரவி கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த வேளையில் இந்த தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் நகைகளை ஏலத்திற்கு அனுப்பி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com