போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்...  காரைக்குடியில் கிளை மேலாளரை தாக்கியதற்கு எதிர்ப்பு...

காரைக்குடியில் போக்குவரத்து கிளை மேலாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்...  காரைக்குடியில் கிளை மேலாளரை தாக்கியதற்கு எதிர்ப்பு...
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல கிளைமேலாளராக உள்ளவர் சண்முகம். புதிய பேருந்து நிலையைத்தில், தனியார் பேருந்து புறப்படும் நேரம் பிரச்சனை காரணமாக, தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், கிளை மேலாளர் சண்முகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கிளை  மேலாளர் சண்முகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், சண்முகத்திற்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சண்முகத்தை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரப்பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com