“தான் ஒரு நல்ல அடிமை என நிரூபிக்கிறார் எடப்பாடி..” என இப்படி சொல்லிட்டாங்க..!? - கனிமொழி சுளீர்!!
“ SIR எதிர்த்து நாம் வழக்கு போட்டால் முதலாளிக்கு (பாஜக) நல்ல அடிமை நான் தான் என்று எடப்பாடி பழனிசாமி எஸ் ஐ ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டு இருக்கின்றார்” கனிமொழி எம்பி சாடல்.!
இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு SIR- ஐ எதிர்த்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ம தி மு க அரசியல் ஆலோசனை குழு செயலாளர் சிப்பிப்பாறை ரவீந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசும் போது, “2002ல் வாக்காளர் சரிபார்ப்பு செய்யும்போது 6 மாதம் அவகாசம் தரப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மாதம் தான் அவகாசம் தருகின்றனர். இதில் பல பிரச்னைகள் உள்ளது. கடைசிநேரத்தில் பட்டியலில் இருந்து பெயரை நீக்க செய்வது தான் இது. பீகாரில் பாஜகவிற்கு ஓட்டு போடாதவர்கள் பெயரை எடுத்துள்ளனர். வாக்குரிமை அடிப்படை உரிமை, தமிழக மக்கள் பாஜகவிற்கு எப்போதும் ஓட்டு போட தயாராக இல்லை. தமிழகத்தில் வாக்குரிமை இல்லை என்றால் தொகுதிகள் ஏன் இவ்வளவு? என்று தொகுதிகளை குறைக்க பார்ப்பார்கள்.
பிஜேபி, SIR எதிர்த்து நாம் வழக்கு போட்டால் முதலாளிக்கு நல்ல அடிமை நான் தான் என்று எடப்பாடி பழனிசாமி எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டு இருக்கின்றார்.” மொழி, பேச்சுரிமையை தடுக்கும் மதம், இனம், மொழி ரீதியாக பிளவுபடுத்தும் பாஜகவை நாம் எதிர்க்க வேண்டும். அடிப்படை உரிமைகளுக்காக நாம் போராடுவோம்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
