நீண்ட நேரம் காத்திருந்தும் தக்காளி கிடைக்கவில்லை...ஏமாற்றமடைந்த பொதுமக்கள்...!

நீண்ட நேரம் காத்திருந்தும் தக்காளி கிடைக்கவில்லை...ஏமாற்றமடைந்த பொதுமக்கள்...!
Published on
Updated on
1 min read

தக்காளிக்காக காத்திருக்கும் பொதுமக்கள், கடைகளுக்கு வரும் தக்காளி அளவை அதிகரித்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 120 முதல் அதிகபட்சமாக 130 வரை விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த் இரண்டு தினங்களாக குறைந்தபட்சம் 130 முதல் அதிகபட்சமாக 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலையின் பாதிப்பினால் பொதுமக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டுறவு நியாய விலை அங்காடிகளில் தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு கடைகளுக்கும் 20 லிருந்து 30 கிலோ மட்டுமே தக்காளி வருவதாகவும், ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, காலையிலிருந்து காத்திருக்கும் பெரும்பாலானோருக்கு தக்காளி கிடைக்கவில்லை, எனவே கடைக்கு வரும் தக்காளியின் அளவை கூடுதலாக அதிகரிக்க செய்தால் அனைவரும் பயனடைவார்கள் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com