தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...

தமிழகம் முழுவதும்  நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில்  இன்று  வரைவு  வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் வரைவு  வாக்காளர் பட்டியல் வெளியீடு...
Published on
Updated on
1 min read

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி சென்னை ரிப்பன் மாளிகையில்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் பட்டியலை வெளியிட்டார். இதில் ஆண்  வாக்காளர்கள் 19 லட்சத்து 92  ஆயிரத்து 198 பேரும்  பெண் வாக்காளர்கள் 20  லட்சத்து 60 ஆயிரத்து 767 பேரும் இடம்பெற்றுள்ளனர். அது போல்  மூன்றாம் பாலினத்தவர்கள் 1073 பேர் என 
 மொத்தம் 40 லட்சத்து 54  ஆயிரத்து 38 வாக்காளர்கள் சென்னை மாவட்டத்தில் உ்ளளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன் தீபசிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு  தயாராக உள்ளதாகவும், அரசு உத்தரவுகளை பின்பற்றி செயல்படுத்துவோம் எனவும்  தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5 லட்சத்து 72, ஆயிரத்து 615 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்  காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வரைவு  வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.  கடலூர் விழுப்புரம் நெல்லை கன்னியாகுமார் மாவட்டஙகளிலும் வரைவு  வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com