இன்ப்ளுயன்சா காய்ச்சல் மாவட்ட அதிகரிகளுக்கு சுகாதார வழிகாட்டுதல் வெளியீடு

இன்ப்ளுயன்சா காய்ச்சல் மாவட்ட அதிகரிகளுக்கு சுகாதார வழிகாட்டுதல் வெளியீடு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் அதிகரிக்கும் இன்ப்ளுயன்சா காய்ச்சல் - சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு சுகாதார துறை சார்பில்  வழிகாட்டுதல்கள் வெளியீடு

அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு கடிதம் 

இது குறித்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் H1N1 வைரஸ் பாதிப்பு தற்போது அதிகமாக கண்டயறிப்பட்டுள்ளதாகவும்  தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வழிகாட்டுதல் வழங்கியுள்ளார்.

காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும்

அதன்படி மாவட்டங்களில் அதிக காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் ,  நடமாடும் வாகனங்கள் மூலம் இந்த காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் இதற்கான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com