இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...!

இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...!
Published on
Updated on
1 min read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். 

சென்னை அமைந்தகரையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023 மற்றும் 2024 கல்வி ஆண்டுக்கான (BNYS) யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புகளுக்கான 1,660 இடங்களுக்கான தர வரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 

அதன்படி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு  இருக்கைகளுக்கான 160 இடங்களும், சுயநிதி கல்லூரிகள் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட 960 இடங்களும், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் 540 இடங்கள் என மொத்தம் 1,660 இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com