உரிய பாதுகாப்பின்றி செயல்படும் கொள்முதல் நிலையம்...10,000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

காஞ்சிபுரம் மாவட்டம், கட்டிவாக்கம் அருகே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
உரிய பாதுகாப்பின்றி செயல்படும் கொள்முதல் நிலையம்...10,000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள்  திறந்தவெளியில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதற்கான தார்ப்பாய் மற்றும் குடோன்கள் இல்லாத நிலையில் திறந்தவெளியிலேயே அனைத்து மூட்டைகளும்  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இன்று திடீரென மழை பெய்ததால் கட்டவாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து முற்றிலும் சேதமடைந்தன.

இதற்கிடையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை எதையும் வழங்காமலும் , போதிய நெல் இருப்பிட வசதிகளை ஏற்படுத்தாமல் இதுபோன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எழுந்ததால் தற்போது பெய்த கன மழையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள்  மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பல இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் இது போன்று கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கு வைத்து பாதுகாக்கப்பட்டால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com