சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் ரெய்டு

சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள உதவியாளர், நண்பர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. நந்தனம் பகுதியில் உள்ள உதவியாளர் சரவணனின் இல்லம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவனம், அண்ணாநகர் மேற்கில் உள்ள முன்னாள் உதவியாளர் முருகனின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. மேலும், சேலம் தரண் மருத்துவமனை மருத்துவர் செல்வராஜா வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்து சேர்த்ததாக எழுந்து புகாரின் அடிப்படையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 18ம் தேதி விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com