
ரயில் பெட்டிக்குள் புகுந்த பாம்பை ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 க்கு நெல்லைக்கு செல்லும், நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் S1 பெட்டியில் பாம்பு இருப்பதாக பயணிகள் அளித்த தகவலின் பேரில் எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை மீட்டனர்.
பயணிகள் துரிதமாக செயல்பட்டதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து கொம்பேரி மூக்கன் வகைப் பாம்பை உயிருடன் பிடித்து வனப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.