சென்னையில் கொட்டித் தீர்த்த மழை... 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்...

சென்னை, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. 
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை... 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்...
Published on
Updated on
1 min read
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, நேற்று இரவு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களிலும் மின்துண்டிப்பு ஏற்பட்டது.
அதே போன்று சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர்,பல்லாவரம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை, கிண்டி, ஈக்காட்டு தாங்கல், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், ராமாபுரம், அயனாவரம், குரோம்பேட்டை, புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது.
மேலும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சதுரகிரி மலை பகுதிகளில் தொடர்ந்து மழைப்பொழிவு இருப்பதால், ஆனி மாத அமாவாசை தினத்தில் அங்குள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமி திருக்கோயிலுக்குச் செல்ல, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com