
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தேயிலை தோட்ட விவசாயிகளுக்கு பசுந்தேயிலையின் ஆதார விலையை திமுக அரசு உயர்த்தி வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிப் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
“ நீலகிரியில் விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக திகழும் பசுந்தேயிலைகளுக்கு ஆதார விலையை உயர்த்தி வழங்கக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக அரசு அதனை கண்டுக்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் மானியம் வழங்கக் கோரியும், குறைந்தபட்ச ஆதார விலையான 33 ரூபாய் 50 காசுகளை பெற்றிட மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.