மீண்டும் அரசியல்..? புதிய நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி...

புதிய நிர்வாகிகளை சென்னையில்  இன்று சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
மீண்டும் அரசியல்..? புதிய நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி...
Published on
Updated on
1 min read

அரசியலில் ஈடுபடப் போவதில்லை என ரஜினி அறிவித்ததற்கு பிறகாக பிற அரசியல் கட்சிகளில் சேர்ந்தவர்களுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி சந்திக்கி உள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் அரசியல் பிரவேசம் தொடங்கும் என சென்ற ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் ரஜினி அதனை தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் தம்மால் அரசியலில் ஈடுபட முடியாது என தெரிவித்து டிசம்பர் 29ம் தேதி அரசியல் நிலைபாட்டில் இருந்து பின்வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் இந்த அறிவிப்பு காரணமாக அதிர்ச்சி அடைந்து பல அரசியல் கட்சிகளுக்கு இணைந்தனர். இதில் முக்கியமாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையில் 6 முக்கிய நபர்கள் திமுகவில் இணைந்தனர்.

அந்த அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ஆக தொடர்ந்து மௌனம் காத்துவந்த ரஜினி தனது சினிமா பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அண்மையில் அண்ணாத்தே படப்பிடிப்பை முடித்து விட்டு தனது உடல்நிலை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் மாற்று கட்சிகளுக்கு சென்ற நிர்வாகிகளுக்கு மாற்றாக பணியமர்த்தப்பட்ட நிர்வாகிகளையும் சில மாவட்டச் செயலாளர்களையும் இன்று சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com