விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் திருமாவளவனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தனது 28-ஆம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன் M.P. அவர்கள்.
65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்." எனக் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்