
கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். இதுக்கா பாமக -வில் பெரும் பதற்றத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
திமுக தான் காரணம்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழு கூட்டத்தில், “பாமக -வில் நடக்கும் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் திமுக தான். காரணம்.. அய்யாவிற்கு என் மேல் ஏதும் கோவம் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும். அவர் உடல் நலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவிலே மூத்த அரசியல்வாதி அவர்தான். இந்த கட்சியை உருவாக்கி நம்மை எல்லாம் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
ராமதாஸ் மறுப்பு..
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு மறு தேதியில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்திலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ஜி.கே மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களை சந்திப்பதற்காகவும், மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காகவும் சென்னைக்கு புறப்பட்டதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸிடம் “பாமக -வில் நிலவும் குழப்பங்களுக்கு காரணம் திமுக தான் என அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார் அது உண்மையா என கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த ராமதாஸ், “அது முற்றிலும் கடைந்தெடுத்த பொய். அவரவர் அவரவர் வேலையை பார்க்கின்றனர்” என கூறினார், பின்னர் ராமதாஸ் மன்னிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு “போகப்போக தெரியும்” என பதிலளித்து சென்றுள்ளார். பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் பாமக -வில் இன்னும் குழப்பமா நிலைதான் ஏற்பட்டுள்ளது. அதற்கு திமுக காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டை ராமதாஸ் மறுத்திருப்பது அன்புமணிக்கு நிச்சயம் பின்னடைவாக அமையும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.