தடையை மீறி மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

தடையை மீறி மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
Published on
Updated on
1 min read

மேகதாதுவில் அணை கட்டுவதற்காகவும், நிலம் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும்  வன அதிகாரிகளை நியமித்த கர்நாடகா அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி மேகதாது அணையை கட்ட துடிக்கும் கர்நாடகம் அரசு, திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு கூட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு என்று குறிப்பிட்டுள்ள அவர், திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்காகவும், நிலம் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும்  வன அதிகாரிகளை நியமித்த கர்நாடகா அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையின் மூலம் கண்டனம் த்தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com