அடுத்த மழைக்கு தயாரா? உருவானது மேலாடுக்கு சுழற்சி.. 'சென்னைக்கு' மழைப்பொழிவு எப்போது தொடங்குகிறது?

நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளிலும், நவம்பர் 13 முதல் 16ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
Ready for the Next Rains? Low-Pressure Area Formed Over Bay of Bengal – When Will It Rain?
அடுத்த மழைக்கு தயாரா? உருவானது மேலாடுக்கு சுழற்சி.. சென்னைக்கு மழைப்பொழிவு எப்போது?AI Generated
Published on: 
Updated on: 
1 min read

வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 13) அதிகாலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்ததாக வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 14) நன்கு வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளிலும், நவம்பர் 13 முதல் 16ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

அதேபோல், நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைப்பொழிவு காணப்படும். 15ம் தேதி முதல் வட தமிழகம் மற்றும் டெல்டாவில் கனமழை காணப்படும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதைப் பொறுத்து 16ம் தேதி அதி கனமழை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Ready for the Next Rains? Low-Pressure Area Formed Over Bay of Bengal – When Will It Rain?
வெளிநாட்டில் விவாகரத்து பெற்றால் இந்தியாவில் செல்லுமா? இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.