சிறை காவலர் 3 பேருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளை.

சிறை காவலர் 3 பேருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு -   உயர் நீதிமன்ற மதுரை கிளை.
Published on
Updated on
2 min read

கும்பகோணம் கிளை சிறையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில், சிறை காவலர் மூன்று பேருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சரவணன் என்பவர் கடை முன் நின்று சிகரெட் குடித்த  புகாரில் கைது செய்யப்பட்டு கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர், சிறையில் இருந்தபோது 2019-ல் வலிப்பு நோய் ஏற்பட்டு, தஞ்சை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது குறித்து விசாரித்த தஞ்சை ஜேஎம் 3 மாஜிஸ்திரேட் சிறை காவலர்களால் தாக்கப்பட்டதால் சரவணன் உயிரிழந்ததாக அறிக்கையளித்தார். இதையடுத்து,  கும்பகோணம் கிளை  சிறை வார்டன் இளையராஜா, காவலர் வைரமூர்த்தி, உதவி ஜெயிலர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது கும்பகோணம் கிழக்கு போலீசார் கொலைக்குற்றம் அல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டபல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். 

இதில், தங்களுக்கு முன்ஜாமீன் கோரி 3 பேரும் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் முன் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில்,  அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  முதலில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் அறிக்கைக்கு  பின் தீவிரமான  குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் குற்றம் புரிந்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என  அரசு தரப்பின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி வாதிட்டுள்ளார்.

இதனை பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு  விபரங்கள் பின்வருமாறு:- 

இறந்தவரின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளதாகவும், வயிறு உள்ளிட்ட இடங்களில் காயமும், வயிற்றில் ஆங்காங்கே ரத்த திட்டுகள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது.

கடுமையான தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பால் தான் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையிலும், காயங்களால் ஏற்பட்ட ரத்த இழப்பு மற்றும் அதிர்ச்சியால் இறந்திருக்கலாம் தலை, மார்பு மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்தன. அவரது இறப்பு இயற்கைக்கு மாராணது எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். திருத்தப்பட்ட இறுதி அறிக்கையோ கடந்த ஏப் 19ல் 2023  தான் தாக்கல் ஆனால் அதனை கீழமை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இறுதி அறிக்கையில் மனுதாரர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பணியில் தான் உள்ளனர் மனுதாரர்களை பாதுகாத்திடும் வகையில் ரகசியமாக செயல்பட்டுள்ளனர் பல்வேறு காயங்களால் தான் இறந்துள்ளார் எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்பதால் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மனுதாரர்களுக்கு எதிராக கொலை குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 4 வாரத்தில் புதிதாக திருத்தப்பட்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் மாஜிஸ்திரேட் அறிக்கையின் படி உரிய துறைரீதியான நடவடிக்கையை சிறைத்துறை டிஜிபி மேற்கொள்ள வேண்டும் மாஜிஸ்திரேட் அறிக்கைவின் படி மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் துறையினர் அதிகாரிகள் மீது  விரிவான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கின் குற்றப்பிரிவுகளை மாற்றம் செய்து உரிய நடவடிக்கைக எடுக்க வேண்டும் இவ்வாறு நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com