“பாஜகவின் Carbon Copy-ஆக செயல்படாதீர்கள்.. இதை திசை திருப்பதான் கைதா?" நாதக கார்த்திகா விவகாரத்தில்.. தவெக அரசுக்கு உதயநிதி சரமாரி கேள்வி!

த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Udhayanidhi X post
Udhayanidhi X post
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை காவல்துறை கைது செய்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகாவை கோவையில் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை இல்லத்தில் இருந்த அவரையும் அவரது கணவரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து தாராபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இடைத்தேர்தலின் பொழுது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் வரும் பாதையில் சாலை மறியல் மேற்கொண்டதாக கூறி அவர் மீது தேர்தல் காலத்தில் வழக்கு பதிவு செய்து தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாதக-வை சேர்ந்த கார்த்திகாவின் கைதிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு செய்துள்ளனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில் கண்டனத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம். இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்" என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே தவெக-வின் முன்னாள் நிர்வாகி பூபாலன், போதைப்பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தவெக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது கைதிற்கு எந்தவித விளக்கமும் முதல்வர் தரப்பில் இருந்துஅளிக்கப்படாத நிலையில் இதை திசை திருப்பதான் இப்படி ஒரு கைது நடந்திருப்பதாக உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com