மத சாயம் என்பது இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத முதலமைச்சரை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி என பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் செய்தியாளர்களுக்கு காட்டமாக பதிலளித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை அருகே உள்ள பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு நாகராஜனிடம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக மத சாயம் பூசப்பட்ட கட்சியாகவே காணப்படுவதாக எதிர்கட்சிகள் கூறுவது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், மத சாயம் என்பது இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத முதலமைச்சரை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி என்று காட்டமாக பதிலளித்தார்.