இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதலமைச்சருடன் சந்திப்பு:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம்
இடஒதுக்கீடு:
இஸ்லாமியர்களுக்கு தற்போது 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் முதலமைச்சரை நேரில் சந்தித்து இஸ்லாமியர்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலை:
மேலும் நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை அண்ணா பிறந்தநாள் போன்ற பல்வேறு முக்கிய தினங்களில் விடுதலை செய்து வரும் நிலையில் இஸ்லாமியர்களையும் அதே போன்று விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆதரவு யாருக்கு?:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஆதரவு அளிக்கிறதா என்ற கேள்விக்கு சிஏஏ சட்டங்களை கொண்டு வந்தவர்களுக்கு சிறுபான்மையினர் சமூகம் ஆதரவு அளிக்காது என்றும் அதற்கு எதிரானவர்களுக்கு தான் வாக்களிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் லேடி சூப்பர் ஸ்டாரை சீண்டிய நடிகை மாளவிகா.....