தொடர் கனமழையின் விளைவு...! 8 விமான சேவைகள் ரத்து...!

தொடர் கனமழையின் விளைவு...! 8 விமான சேவைகள் ரத்து...!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்திருந்தது. அதனால் சென்னை விமான நிலையத்தில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.   

அதன் படி, சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து அதிகாலை 4.55 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 6.15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம், பிற்பகல் 1.10 மணிக்கு கர்னூல் செல்ல வேண்டிய விமானம், மாலை 5.10 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 

மேலும், அதிகாலை மும்பையில் இருந்து வர வேண்டிய விமானம், காலை 9.30 மணிக்கு மதுரையில் இருந்து வர வேண்டிய விமானம், மாலை 4.20 மணிக்கு கர்னூலில் இருந்து வர வேண்டிய விமானம், இரவு 8:30 மணிக்கு மதுரையில் இருந்து வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து பிராங்க்பார்ட், இலங்கை, பாரீஸ், தோகா, சார்ஜா, துபாய், அந்தமான் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை  தாமதமாக புறப்பட்டு சென்றன. 

மழை காரணமாக விமான சேவை மாற்றி அமைக்கப்பட்டதால் கால தாமதம் மற்றும் ரத்து செய்யபட்டதற்கான தகவல்கள் முன்னதாகவே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com