சித்திரை திருவிழா.. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா 5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சித்திரை திருவிழா.. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில், முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம், தேர்திருவிழா ஆகியவை முடிவுற்ற நிலையில், பக்கதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அழகர் ஆற்றில் இறங்கியபோது, கட்டுப்பாடுகளை மீறி முண்டியடித்து பெரும்பாலானோர் வைகை ஆற்றில் இறங்கினர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட பேர் பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா 5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண  காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com