"தினமும் ரெய்டு நடத்தட்டும்... Always Welcome" ஆர். எஸ் பாரதியின் Cool-ஆன பேச்சு!

"தினமும் ரெய்டு நடத்தட்டும்... Always Welcome" ஆர். எஸ் பாரதியின் Cool-ஆன பேச்சு!

Published on

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு இல்லத்தில் காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது, " 50 ஆண்டு காலமாக இதுபோன்ற எத்தனையோ ரெய்டுகளை திமுக அரசு பார்த்துள்ளது. ED என்பது enforcement department என்பதை விட entertainment department யாக மாறியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "இரண்டு வாரத்திற்கு முன்பாக ஏ.வ வேலு நடத்திய மாபெரும் மாநாட்டை கண்டு பயந்து இன்று அவரது இல்லத்தில் ரெய்டு நடைபெறுகிறது. தினமும் ரெய்டு நடத்தட்டும் நாங்கள் always welcome போல வரவேற்கிறோம். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற பல ரெய்டுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

மேலும், "வருமானவரித்துறை சோதனையை சட்டரீதியாக தொடர்ந்து நாங்கள் எதிர்கொண்டு தான் இருக்கிறோம். வருமான வரித்துறை என்றாலே பொதுமக்கள் சாதாரணமாக நினைக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது" எனவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com