RTO அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட உத்தரவு!

RTO அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட உத்தரவு!

Published on

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அலுவலகங்களுக்குச் செல்வோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் தேவையிருப்பதால் சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் ( மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட)  சனிக்கிழமையன்று பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ​​அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட உத்தரவிட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப்பட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் மற்றும் புகார்கள் வந்தால், இந்த அறிவுறுத்தல் உடனடியாக திரும்பப் பெறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com