சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது - சிறையில் அடைக்கப்பட்டார்

யூடியூபில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது - சிறையில் அடைக்கப்பட்டார்
Published on
Updated on
1 min read

யூடியூபில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாக்ஸ்கான் தொழிற்சாலையை சேர்ந்த பெண் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக, வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது சட்டப்பிரிவு 153, 153A  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com