
எழுத்தாளர் டாக்டர் ராஜேந்திரன்
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மு.ராஜேந்திரன். இவர் எழுதிய 'காலாபாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு காலா பாணி நாவல் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் கொரானா காலக்கட்டத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் நடைபெற்ற போரை மையமாக வைத்தும் நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என அந்தநாவலின் ஆசிரியர் வெளியிட்டு இருந்தார்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த காலத்திலிருந்தே தன் தீவிரமான அரசாங்கப் பணிகளுடன், இலக்கியம் சார்ந்தும், வரலாறு சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டு இவர் உருவாக்கும் வரலாற்று நூல்கள் எளிமையான மொழி நடையில் வரலாற்று ஆவணங்களை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கி வருகின்றன
நாவல்கள் :
காலா பாணி, 1801,வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு இவருடைய நாவல்கள் ஆகும் இவர் சிறுகதைகள், கட்டுரை,பயண நூல், பணி அனுபவம், செப்பேடுகள், ஆய்வுநூல், ஆகியவற்றையும் புத்தகங்களாக வெளியிட்டுடிருக்கிறார்