சாமி நகையை விட்டுவிட்டு மற்ற நகைகளை கொள்ளையடித்த பக்தியுள்ள மர்ம நபர்...!

சாமி நகையை விட்டுவிட்டு மற்ற நகைகளை கொள்ளையடித்த பக்தியுள்ள மர்ம நபர்...!

சாமி நகையை மட்டும் விட்டுவிட்டு மீதம் இருந்த பத்து சவரன் நகை அரை கிலோ வெள்ளி மற்றும் நாலு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற பக்தியுள்ள திருடன்..!
Published on

திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் ஊராட்சி சகர தெருவில் வசிப்பவர் அப்பு ராஜ் மகன் சந்திரன் (67). இவரது மனைவி கலா (60). இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு தங்களுடைய உறவினர் வீட்டிற்கு பெங்களூர் சென்றுள்ளனர். மீண்டும் நேற்று இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும், பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 லட்சம் ரூபாய் பணம், பத்து சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆனால் அருகாமையில் இருந்த கோயில் அம்மனுக்கு சொந்தமான இரண்டு சவரன் நகையை மட்டும் விட்டு சென்றுள்ளதை பார்த்து வியந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர், இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com