தமிழகத்தில் பாஜக போன்ற சனாதன சக்திகளுக்கு...2019 நாடாளுமன்றத் தேர்தல் சுட்டிக்காட்டியது என்ன?

தமிழகத்தில் பாஜக போன்ற சனாதன சக்திகளுக்கு...2019 நாடாளுமன்றத் தேர்தல் சுட்டிக்காட்டியது என்ன?
Published on
Updated on
1 min read

ஆளுமை மிக்க தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

ஆளுமை மிக்க முதலமைச்சர் :

சென்னை, சோழிங்கநல்லூரில் திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டின் நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களில் ஆளுமை மிக்க முதலமைச்சராக திகழ்பவர் ஸ்டாலின் தான். 15 மாதங்களில் தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பெற்றுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சனாதன சக்திகளுக்கு இடமில்லை :

தொடர்ந்து பேசிய அவர், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் பாஜக போன்ற சனாதன சக்திகளுக்கு இடமில்லை என்பதை காட்டியதாக தெரிவித்தார். மேலும், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அனைவரும் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியதாக மத்திய அரசிடம் வலியுறுத்தியவர்  தமிழக முதல்வர் என பெருமிதம் கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com