மெரினா கடற்கரையில் ஒரு ரூபாய் நாணயம் போன்று மணல் சிற்பம்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் ஒரு ரூபாய் நாணயம் போன்று மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் ஒரு ரூபாய் நாணயம் போன்று மணல் சிற்பம்
Published on
Updated on
1 min read

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் ஒரு ரூபாய் நாணயம் போன்று மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் கந்தசாமி அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை திறந்துவைத்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் (அக்டோபர் 31) அந்த வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட மணல் சிற்ப கலைஞர்களால் ஒரு ரூபாய் நாணயம் வடிவிலான மனற்சிற்பம்  வடிவமைக்கப்பட்டது.

நாணயத்துடன் கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் நாணயத்தின் வடிவம் உருவாக்கப்பட்டதாகவும், ரூபாய் நாணயத்திற்கு மேல் இரண்டு கொம்புகள் மற்றும் வாலுடன் கூடிய சாத்தான் போன்ற உருவம் நாணயத்தை சுற்றி இருப்பது போலும் மணல் சிற்பம்  அமைக்கப்பட்டுள்ளதாக மணல் சிற்பக் கலைஞர்கள்  தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com