அரசு அனுமதி இன்றி மணல் திருட்டு;  ஐந்து மாட்டு வண்டிகள் மணலுடன் பறிமுதல்..! 

அரசு அனுமதி இன்றி மணல் திருட்டு;   ஐந்து மாட்டு வண்டிகள் மணலுடன் பறிமுதல்..! 
Published on
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கெடிலம் ஆற்றில் மணல் மற்றும் கனிம வளங்கள் திருடப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் ஐந்து மாட்டு வண்டிகளில் அனுமதி இன்றி திருடிய மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கெடிலம் ஆற்றில் அரசு அனுமதி இன்றி சமூக விரோதிகள் மாண்டு வண்டி, லாரி, ட்ராக்டர் போன்ற வாகனங்களில் கனிம வளங்களை கேட்பாரற்று, இந்த பகுதியில் மணல், கூழாங்கல், செம்மண் போன்ற கனிம வளங்களை கொள்ளை போவதாக புகார் எழுந்தது. 

அதையடுத்து, அந்த புகாரின் பேரில்  மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் அவர்கள் உத்தரவின்படி திருநாவலூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது, `ஏதோ ஏமாளியாக இருக்கும் மாட்டு வண்டியில் மணல் திருடி எடுத்துச் சென்றபோது அதிஷ்ட வசமாக ஐந்து மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்தனர். ஆனால் கடத்தி ஒருநபர் கூடம் போலீசார் கைது செய்து வில்லை.

மணல் கடத்தி நபர்களை கைது செய்தால் மாமூல் வாங்கும் போலீசார் முகத்திரை கிழிந்துவிடும் என்பதற்காகவே மணல் கடத்தல் திருடர்களை திருநாவலூர் போலீசார் தப்பிக்க விட்டுவிடுகின்றனர்.

கனிம வளங்களை கொள்ளையடிக்கும்  சமூக விரோதிகளுக்கு  துணை போகும் போலீசார் மீது மாவட்ட எஸ்பி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com