சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகிறார் சத்தியநாராயண பிரசாத்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகிறார் சத்தியநாராயண பிரசாத்
Published on
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபிக்  ஆகிய 4 பேரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி நான்கு பேரும்  கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.  

இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து  குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய நீதிபதி ஜெ.சத்தியநாராயணா பிரசாத், நாளை பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com