“மோசடியாளர் அனில் அம்பானி..! எஸ்.பி.ஐ கொடுத்த பட்டம்..! அமலாக்க துறை அதிரடி அறிவிப்பு..!

“மோசடியாளர் என பட்டம் வழங்கியுள்ளது” அதற்கு காரணம் கடனை பெற்று திரும்ப செலுத்தாததால்தான்...
anil ambani
anil ambani
Published on
Updated on
1 min read

காலங்காலமாக இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள்  நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் உதவுகிறோம்..நாட்டின் ஜிடிபி -ஐ பெருக்குகிறோம், வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்குகிறோம்  என கூறி இங்குள்ள நிதி நிறுவனங்களில் அதிக கடனை வாங்கிவிட்டு அதனை செலுத்தாமல் பின்னர், வெளிநாடுகளுக்கு ஓடிவிடுவது வழக்கம். SBI போன்ற பொது நிறுவனங்களில் வாங்குவதற்கு ஒன்றிய அரசே தொழிலதிபர்களுக்குப் உதவு புரியும் என்பது நாடறிந்த உண்மை.

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவரின் சகோதரரான அணில் அம்பானிக்கு “மோசடியாளர் என பட்டம்  வழங்கியுள்ளது” அதற்கு காரணம் கடனை பெற்று திரும்ப செலுத்தாததால்தான்.

கடன் மோசடியாளர் என அறிவிக்கக் காரணமாக இருந்தது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஒரு சில வங்கிகளிடமிருந்து கூட்டாக ரூ.31,580 கோடி கடன்களைப் பெற்றுள்ளது. எஸ்பிஐ வங்கியின் மோசடி கண்டறியும் குழு அளித்த அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்கிய மொத்த கடனில் 44 சதவீதமான ரூ.13,667.73 கோடி ஏற்கெனவே வாங்கிய கடன் நிலுவையை திரும்ப செலுத்தப் பயன்படுத்தியுள்ளது. சுமார் 41 சதவீத கடனான ரூ.12,692.31 கோடி, துணை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றப்பட்ட கடன்தொகை ரூ.41,863.32 கோடியாக உள்ள நிலையில், அதில் ரூ.28,421.61 கோடியின் பயன்பாட்டை கண்டறிவதற்கு மட்டுமே தரவுகள் உள்ளன. இந்த நிலையில்தான், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை 'மோசடி' என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநர் அனில் அம்பானி மீது ரிசர்வ் வங்கியில், எஸ்பிஐ வங்கியானது புகாரளிக்க முடிவெடுத்திருக்கிறது.

அனில் அம்பானிக்கு சொந்தமா ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2019 ஆண்டே திவாலானது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  மேலும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்க துறை இந்த நிலையில் இந்த வழக்கை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் கொண்டுசெல்ல ஸ்டேட் பாங்க் முடிவு செய்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com