புதிய அமைச்சரவையிலும் பட்டியல் இனத்தவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை...!!

புதிய அமைச்சரவையிலும் பட்டியல் இனத்தவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை...!!
Published on
Updated on
1 min read

திராவிட மாடல் வாரிசு அரசியலை மையப்படுத்தி தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
கோவையில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டியளித்துள்ளார்.

கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, 24 மணி நேரமும் ஆர்ஓ தண்ணீரை பெற்றுக் கொள்ளும் தானியங்கி எந்திரத்தை திறந்து வைத்துள்ளோம் எனவும் புதிதாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும்  அரசியல் ரீதியாக அவர் அனுபவம் உள்ளவர் எனவும் சக உறுப்பினராக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

மேலும், மாநில முதலமைச்சருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தேன் எனவும் திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால் அந்த சமூக நிதி சம நீதியாக இருக்க வேண்டும் என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதலமைச்சருக்கு பதவியோ, அல்லது முக்கிய இலாகாக்களின் பதவியோ வழங்கவில்லை எனக் கூறிய அவர் கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்கு வழங்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பாஜகவில் உண்மையான ஜனநாயகம் உள்ளது எனவும் கருத்துக் கணிப்பு அல்ல மக்களை நம்புகிறோம் எனவும் மக்கள் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது எனக் கூறிய அவர் கருத்துக்கணிப்பை வைத்து நேரத்தை மட்டுமே போக்கிக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com