பள்ளி மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை... அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து..?

பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த  கல்வித்துறை... அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து..?
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால், பாடத் திட்டங்களை நடத்தி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்பதற்காக வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக தொடங்கி, ஜனவரி 1-ம் தேதி அல்லது முதல் வாரம் வரை விடப்படும் அரையாண்டு தேர்வு விடுமுறை இந்த முறை கிடையாது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பள்ளிகள் வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com