
மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிக்கால் அமைக்கும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், தாமதாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனைத்து நீர் வழித் தடங்களிலும் ஆகாயத்தாமரைகளை அகற்றிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.