பறக்கும் ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த குழு நியமனம்!!

பறக்கும் ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த குழு நியமனம்!!
Published on
Updated on
1 min read

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த குழு நியமத்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை அடையாறு இந்திரா நகரில் இருந்து கடந்த 2-ம் தேதி, மின்சார ரயிலில் ப்ரீத்தி என்ற இளம்பெண் பயணித்தபோது திடீரென அவரது செல்போனை இருவர் பறிக்க முயன்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ப்ரீத்தி, அதனை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ப்ரீத்தி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பிற்காக 15 பேர் கொண்ட சிறப்பு குழுவை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல், தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம், சிறுவர்கள் மற்றும் கல்லூரி இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு, ஜன்னல்களில் தொங்கியவாறு, படிகட்டில் தொங்கிக்கொண்டு, நடைமேடையில் கால்களை தேய்த்துக்கொண்டு செல்வது போன்ற சம்பவங்களும் இதே பறக்கும் ரயில்களில் தான் நடக்கின்றது.  அதனால், தெற்கு ரயில்வே, இதையும் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com