நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலுமிருந்து அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கயல்விழி, மறைந்த முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2013-ல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டாவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி அவரின் ஆதரவாளர்களின் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட இயக்குநராக இருந்து நாம் தமிழர் என்ற கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்தான் சீமான். மேலும், இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் குறிப்பாக சமீபத்தில் வெளியான LIK திரைப்படத்தில் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக அரசியல் களத்தில் 'தமிழ் தேசியம்' குறித்து பேசிவரும் இவர், இளைஞர்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்ட செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்துவருகிறார். தனித்து மட்டுமே தமிழக அரசியலில் களம்கண்டு வருகிறார். தற்போது இவருக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கனவே இவருக்கு மகிழன் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது அவர்களின் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்திருப்பது சீமானின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மதில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.