உத்தர பிரதேசத்தை பிரிக்க வேண்டும்...பாஜகவுக்கு சீமான் பதிலடி!

உத்தர பிரதேசத்தை பிரிக்க வேண்டும்...பாஜகவுக்கு சீமான் பதிலடி!
Published on
Updated on
1 min read

கும்பகோணத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த  பள்ளியை நூலகமாக மாற்றி தர வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 -ம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவத்தின் 18 -ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, நினைவஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 94 குழந்தைகள் உயிரிழந்த இப்பள்ளியை நினைவுச் சின்னமாக மாற்றி, நூலகம் அமைத்து தர வேண்டும் என  கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் விவாதங்கள் இன்றி  மசோதாக்கள் நிறைவேறுவது வேடிக்கையாகி வருவதாக தெரிவித்த அவர், இதுகுறித்து தலைமை நீதிபதியே வேதனை தெரிவித்துள்ளதையும் சுட்டி காட்டினார். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என கூறக்கூடிய பாஜகவினர் இந்தியாவில் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தை முதலில் பிரிக்க குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com