“திருட்டு நிதிக்கு.. திரள் நிதி மேல்” - திமுக மற்றும் தவெகவை மாறி மாறி அட்டாக் செய்த சீமான்!

வருமானத்துறை எங்களை சோதனை செய்து கொள்ளட்டுமே, நாங்கள் கேட்கிறோம்..
seeman dharapuram
seeman dharapuram
Published on: 
Updated on: 
2 min read

இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் அவர்களது ஆதரவாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தாராபுரத்தில் பரப்புரை செய்த நாம் தமிழை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக அதிமுக மற்றும் தவெகவை விமர்சித்து பேசியுள்ளார். அதில் “எங்கள் விடுதலை கனவை வீழ்த்தியவர்கள் இங்கிருந்த ஆட்சியாளர்கள் தான். MLA வையே திருடுபவர்கள் கட்சி கொடி நிறங்களை திருட மாட்டார்களா? கேட்டால் விலகி வந்து தான் சேர்ந்தனர் என்பார்கள்.. இதுவரை இந்த மண்ணில் இருந்த அரசியல் கட்சிகளில் இருந்து தான் மாற்று தேவைப்படுகிறது.

இதுவரை கூட்டணி இல்லை என்ற முடிவில் நாம் உறுதியாக இருக்கிறோம் நாளையும் இருப்போம் எங்களுடைய தத்துவத்தை ஏற்று நீ வரவேண்டும் எங்களுடைய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள வேண்டும் தாயகம் தமிழகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் இல்லை என்றால் எந்த கொம்பனாக இருந்தாலும் எதிர்ப்போம். LTT காசு சீமானுக்கு கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள். அப்படி என்றால் வருமானத்துறை எங்களை சோதனை செய்து கொள்ளட்டுமே, நாங்கள் கேட்கிறோம் மக்கள் கொடுக்கிறார்கள் நீங்கள் கேட்டுப் பாருங்கள் யாராவது கொடுக்கிறார்கள் என்று பார்க்கலாம் திருட்டு நிதியை விட திரள் நிதி எவ்வளவோ மேலானது.

எங்களுக்கு வென்றாக வேண்டும் என்ற ஒரே ஒரு கனவு தான் அதற்கு தமிழர்கள் ஒன்றாக வேண்டும். எங்கள் ஒரே இலக்கு இனத்தின் விடுதலை. நாங்கள் ஜெயிக்கவே மாட்டோம் என்று நினைத்து விடாதீர்கள் தம்பி, எனக்கு அதிகாரம் வரும்போது நீங்கள் களங்குவீர்கள், அப்பொழுதே ஆட்சியை இவர்களிடம் கொடுத்து இருந்தால் நாட்டை காப்பாற்றி இருக்கலாம் என்று நினைப்பீர்கள். எனக்கு நாடகம் போடு தெரியாது உண்மையாக இருப்பேன், மின்சாரமே கிடையாது ஆனால் மின்சார கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இவர்களை எல்லாம் இருட்டில் போட்டே கொல்ல வேண்டும்.

இங்கு ஆள் மாறும் ஆட்சி மாறும் ஆனால் ஆட்சி முறை மாறாது. இதனை தகர்த்து ஒரு புதிய ஆட்சி முறையை நிறுவ வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கள் கனவிற்கும் அவர்களுக்கும் நிறைய தூரம் உள்ளது எங்களைப் பொறுத்தவரை ஆக சிறந்த கல்வியை எங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அனைவருக்குமான கல்வியை நான் கொடுப்பேன்.. அனைவர் ஆட்சியிலும் வாழ்ந்து விட்டீர்களே எங்கள் ஆட்சியில் வாழ்ந்து பாருங்கள் உலகில் தலைசிறந்த நாடாக மாற்றுவேன். கல்வி தரத்தில் சிங்கப்பூரை கூட நம்மால் முந்தி செல்ல முடியாதா? டெல்லியில் அரவிந்த் கஜ்ரிவால் கல்வியை சிறந்த முறையில் கொண்டு வந்தார் அதனாலயே அவரை தோற்கடித்தார்கள்.

இப்பொழுது என்னையும் தோற்கடிக்கிறார்கள் என்றால் முதலாளி பாதிக்கப்பட்டு விடுவார்கள். ஏனென்றால் நான் வந்தால் தண்ணீர் இலவசமாக கொடுத்து விடுவேன் கல்வி தரத்தை உயர்த்தி விடுவேன் குவாரியை மூடி விடுவேன்.ரசிகர் மன்றங்கள் இருக்காது சனி ஞாயிறு கிழமைகளில் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையரங்கில் ஓடிக் கொள்ளட்டும். தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்படத்தை தயாரிப்பேன்.. தீரன் சின்னமலை வேலுநாச்சியார் போன்றவர்களின் படங்களை எடுத்தால் எத்தனை நாட்கள் எடுக்கலாம் என்று தெரியுமா? தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்று ஒன்றை உருவாக்கி நானே படங்களை எடுப்பேன் வரலாற்று படங்களை எடுப்பேன்.

சத்தியபாமா மரத்துக்கதம் குமரவேல் இருவரும் பதவி ஆசைக்காக வம்படியாக பதவியில் இருந்து விலகி எங்கள் மீது தேர்தலை திணித்து உள்ளீர்கள். உங்களிடம் கொழுத்த பணம் உள்ளது ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்கிறீர்கள், நாங்கள் என்ன செய்வது இந்த தேர்தல் வலுக்கட்டாயமாக எங்கள் மீது திணிக்கப்படுகிறது. நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் ஒருவர் பதவியில் இருந்து விலகி விட்டால் அதற்கு அடுத்து அதிக வாக்கு பெற்ற நபர் யார் என்று பாருங்கள் அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குங்கள்..” என பேசி நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com