“சாதியை பார்த்து ஓட்டு போடாதீர்கள்” - இவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள்… அதிமுக, திமுகவை விளாசிய சீமான்!

ஒரு குடும்ப அட்டைக்கு ஐந்தாயிரம் ஆனால் அந்த அட்டையில் இரண்டு லட்சம் கடன்...
“சாதியை பார்த்து ஓட்டு போடாதீர்கள்” - இவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள்… அதிமுக, திமுகவை விளாசிய சீமான்!
Published on
Updated on
2 min read

திருச்சியில் நடக்கும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக மாநாட்டில் பேசி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் “விழிப்புணர்வு தான் மாற்றத்திற்கான முதல் படி இலவசம், அரிசி இலவசம், பருப்பு இலவசம், வேஷ்டி இலவசம்… 1000 ரூபாய் அம்மாக்கு, தங்கைக்கு, தம்பிக்கு இதை சிந்தித்து பார்க்க வேண்டும் இந்த இலவசத்திற்கு பணத்தை எங்கிருந்து எடுக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு வேண்டும். படிக்கும் போது 1000 படித்து முடித்தால் எதுவும் வராது அதற்கு பெண்களுக்கு படிப்பு, படிப்பிற்கு ஏற்ற வேலை இப்படிப்பட்ட ஆட்சியை உறுதி செய்ய தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

பெண்களுக்கு 1000 ரூபாய் திமுக, அதிமுக வந்த 2000 ரூபாய்.. பெண்களுக்கு இலவச பேருந்து திமுக அதிமுக வந்தால் ஆண்களுக்கும் இலவசம்… ஒரு லட்சம் கோடி கடனை வைத்து கொண்டு இலவசமாக பேருந்து ஓட்டும் அரசு.. அரசா தரிசா என்பதை நாம் யோசிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஐந்தாயிரம் ஆனால் அந்த அட்டையில் இரண்டு லட்சம் கடன்… இதை மனம் சிந்திக்க தொடங்க வேண்டும். ஒரு அரசால் கொடுக்க முடியாத தரமான கல்வியை ஒரு தனியார் முதலாளி கொடுக்க முடியும் என்றால்… அரசு கொடுக்காத மருத்துவத்தை தனியார் கொடுக்கிறது என்றால் அரசு தோற்று விட்டதா?

10 லட்சம் கடன் பெற்றிருக்கிறது தமிழக அரசு.. இதையெல்லாம் எப்படி வாங்குகிறார்கள் மக்களை வைத்து, மண்ணை வைத்து… கடன் வாங்கிய ஒருவன் கடன் கொடுத்தவர் பேச்சை கேட்டு தான் நடக்க வேண்டும்.. அதனால் தான் இவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள். திமுக அதிமுக வேறு என்று நினைக்கிறார்கள்… இரண்டு வெவேறு இல்லை ஒன்று தான், இருவரும் ஒரே இடத்தில எப்படி திருடுவது என்று பயிற்சி எடுத்த கூட்டம் தனித்தனியாக திருடுவார்கள் பின்னர் ஒன்றாக கூடி பிரித்துக் கொள்வார்கள். பாரதிய ஜனதாவும் காங்கிரசும் கூட வேறு இல்லை ஒன்றுதான்.

நாங்கள் ஒரு நோக்கத்தை கொண்டிருக்கிறோம் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை விட்டு விட கூடாது. குறித்த இலக்கு வரும் வரை காத்திருப்போம்… நாம் பேசும் அரசியல் இன வெறி அரசியல் என்பார்கள் அதை காதில் வாங்காதீர்கள்… நமது தமிழ் தாய்க்கு யாரையும் பிரித்து பார்க்க தெரியாது.. நாங்கள் அடிமையாக வாழ தயாராக இல்லை.

காவிரி நீர் கேட்கும் போது கொடுக்கவில்லை.. நெய்வேலி நிலக்கரியை பிரித்து கொள்கிறோம் பலன்களை பிரித்து கொள்கிறீர்கள்.. பாதிப்பு மட்டும் எங்களுக்கு. ஒரு சொட்டு தண்ணீரை தமிழர்க்கு கொடுக்க முடியாது என சொன்னது காங்கிரஸ் எங்கு இருக்கிறது ஒற்றுமை? தமிழ் தேசிய அரசியல் எது தேவை படுகிறது என்று இப்போது தெரிகிறதா? கச்சத்தீவை கொடுத்தது யார் காங்கிரஸ் அதை வேடிக்கை பார்த்தது திமுக இப்போது வரை சிறையில் வாடுவது யார் நமது தமிழர்கள்.

பெரியாரை காப்பாற்ற போராடுகிறார்கள்.. வைத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு வேண்டாம் அவ்வளவு தான்.. நேர்மையான ஆட்களாக தமினாட்டில் உங்கள் பிள்ளைகள் தனித்து நிற்கின்றோம். மாற்றம் என்பது சொல் இல்லை செயல்… இலவசம் என்பது வளர்ச்சி இல்லை கவர்ச்சி திட்டம். நாம் முன்வைக்கும் அரசியல் தமிழருக்கு மட்டும் இல்லை உலகிற்கும் சேர்ந்து தான். முடிந்தால் எங்களை போல போராடுங்கள் இல்லை என்றால் எங்களை ஆதரியுங்கள்… சாதியை பார்த்து ஓட்டு போடாதீர்கள் அப்படி போடும் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்..” என கூறி அதனை தொடர்ந்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com