சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சேலம் அம்மாப்பேட்டை புறவழிச் சாலையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக இரு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரைக் கண்டதும், வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதைத் தொடர்ந்து வாகனங்களில் போலீசார் சோதனை நடத்திய போது மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.