
சித்தூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை - புத்தூர் நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில், 20 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்ததோடு, வேனில் இருந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில் பாண்டுலய்யா கோனாமலையில் செம்மரங்கள் வெட்டப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்த 14 தொழிலாளர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் ஒன்றரை கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.