"சிதம்பரம் கோவில், நீதிமன்ற ஆணையை மீறுவதால் அறநிலையத் துறை தலையீடு" - அமைச்சர் சேகர் பாபு!

"சிதம்பரம் கோவில், நீதிமன்ற ஆணையை மீறுவதால் அறநிலையத் துறை தலையீடு" - அமைச்சர் சேகர் பாபு!
Published on
Updated on
1 min read

மதுரை அழகர் கோயிலில் ஒரு கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நவீன பிரசாத தயாரிப்பு கூடம் மற்றும் பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர் பாபு.

பின்னார் செய்தியாளர் சந்திப்பில், சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்த அளவில் ஆரம்பத்தில் இருந்து நாங்கள் சொல்லி வருவது என்னவென்றால் மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் அது. அங்கு வருகின்ற பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கணக்கு வழக்கு சரியாக இருக்க வேண்டும், என்றார்.

மேலும், அந்த திருக்கோயிலுடைய பராமரிப்பு வரவு செலவு கணக்கு கேட்கின்ற உரிமை என்ற அடிப்படையில், தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும். அதை கேட்பதற்கு உண்டான அனைத்து உரிமைகளும் இந்து சமய அறநிலையத்துறைக்கு  இருக்கின்றது, என்ற காரணத்தினால் தான் கேட்கின்றோம், என்றார்.

மேலும், கனக சபையின் மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்யலாம் என பிறப்பிக்கப்பட்ட ஆணை, நீதிமன்ற வழிகாட்டுதலோடு பிறப்பிக்கப்பட்டதாகும். அந்த ஆணையை மீறுகின்ற போது அறநிலையத் துறை அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com