
சென்னை தலைமைச் செயலகத்தில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்குபின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கல்லூரிகளில் வரும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்றார். எனினும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடித்தேர்வு நடைபெறும் எனவும் பொறியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நிச்சயம் நேரடியாகத்தான் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.