

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் கணிக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள்.
இது இப்படி இருக்க மற்றொரு பிரதான கட்சியான அதிமுக -வின் உள்கட்சி பூசல் பெரும் பிரச்சனனையாக மாறி வருகிறது. அதிமுக -விலிருந்து நீக்கப்பட்ட, செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் இணைந்து தனிக்கூட்டணி அமைப்பார்கள், மேலும் அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகபெரிய தலைவலியாக மாறிவிடும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும் டிவிஸ்ட் ஒன்று நடக்கப்போவதாக தகவல்கள் கசிகின்றன.
8 மாதத்திற்கு முன்பே கூட்டணி!
இன்றைய அரசியல் சூழலில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் “விஜய் Factor”. எங்கே விஜய் -உடன் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பாஜக-அதிமுக கூட்டணி 8 மாதங்களுக்கு முன்பே கூட்டணியை உறுதி செய்தது. மேலும் கூட்டணி அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், எடப்பாடியை கூட்டணியின் தலைவர் என்றோ , அதிமுக தலைமையில்தான் ஆட்சியையும் அமையும் என்றோ உத்தரவாதமிக்க பேச்சுக்கள் எழாததால், கள அளவில் இந்த கூட்டணி இணையவே இல்லை. அதனால்தான் திமுக துவங்கி அனைவரும் ‘பொருந்தா கூட்டணி’ என விமர்சித்தனர்.
எடப்பாடியின் ஆசை!!
ஆனால் எடப்பாடி எதாவது அதியசம் நடந்து பாஜக -வை விட்டு விலகி விட மாட்டோமா என வேண்டிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் கொடநாடு, அதிமுக சின்னம் என அவர்கள் மீதும் ஏகப்பட்ட வழக்கு உள்ளது. அமித்ஷா -விற்கு 2026 -ல் பாஜக-அதிமுக வெற்றியைவிடவும் திமுக -வின் தோல்விதான் முக்கியம்.மேலும் சசிகலா, டிடிவி, செங்கோட்டையன், ஓபிஎஸ் என அனைவரும் அதிமுக -வை பாஜக விடம் ஒப்படைக்க உழைத்தவர்கள் என்ற சர்ச்சையும் எழாமல் இல்லை.
ஆனால் விஜய் வந்தால் நிச்சயம் திமுக -வை வீட்டுக்கு அனுப்பலாம் என எடப்பாடி நினைக்கிறார், மேலும் தனக்கு இருக்கும் ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தியும் விட்டார். ஆனால் சமீபத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழுவில் கூட விஜய் அதிமுக உடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக சொல்லியிருந்தார். அதனால், “எதற்கு எடப்பாடி இப்படி போய் கேட்டு அவமானப்படுகிறார்..?” என்றும் வசைபாடினர்.
தவெக -வின் உறுதி!!
அனால் யாருடனும் கூட்டணி இல்லை, என தவெக மிக உறுதிபட கூறியுள்ளது. ஆனாலும் அதிமுக -வினர் விஜயுடனான தங்களின் கூட்டணி விருப்பத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர். இன்னும் ஒருபடி மேலே போய் த.வெ.க வை காப்பாற்ற அதிமுகவால் மட்டும் தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் கருத்துவேறு தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் SIR -ஐ எதிர்த்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது, அப்போது, பேசிய கட்சியின் இணைப்பொது செயலாளர் சி.டி நிர்மல் “அதிமுகவினர் அவர்களுடைய நோக்கத்தை மறந்துவிட்டு பேசுகிறார்கள், பிரதான எதிரி திமுகவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு எங்களை பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்கிறார்கள். யார்வேண்டுமானலும் கூட்டணிக்கு அழைக்கலாம் ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அதிமுக என்ற ஆட்சியில் இல்லாத கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என பேசி அதிமுக -வை லெஃப்ட் -ல் டீல் செய்திருந்தது தவெக.
விஜயுடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்!
50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்த செங்கோட்டையனை எடப்பாடி அதிரடியாக நீக்கியிருந்தது, கட்சியின் அனைத்து மட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்தான் செங்கோட்டையன் வருகிற 27 -ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. செங்கோட்டையன் தவெக -வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை சந்தித்ததாக கூறப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலிருந்து தமிழகத்தில் மறுக்க முடியாத சக்தியாக மாறி உள்ளார். விமர்சனங்கள் இருந்தாலும், பிரதான கட்சிகளுக்கும் கூட அவர் தேவைப்படுகிறார் என்பதே நிதர்சனம். சினிமாவில் ‘introvert’ -ஆக இருந்துகொண்டு உச்ச நட்சத்திரமாக மாறிய விஜய் அரசியலிலும் நிதானமாக காய் நகர்த்துகிறார் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள். ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், செங்கோட்டையனின் இணைவு நிச்சயம் விஜய் -க்கு பலம் சேர்க்கும் என்கின்றனர் சிலர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.